ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் - மிகவும் இரகசியமான புலனாய்வு தகவல்களை வெளியிடாமல் தவிர்ப்பது அரசின் கடமை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பாதுகாக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு இல்லை.
ஆணைக்குழுவின் முன்னிலையில் புலனாய்வுப் பிரிவுகளைச் சேர்ந்த பல அதிகாரிகள் சாட்சியமளித்துள்ளனர். அந்த தகவல்களும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இருப்பதால், அந்த தகவல்களை வெளியிடாமல் தவிர்ப்பது அரசாங்கத்தின் கடமை.
அறிக்கையில் உள்ள மிகவும் இரகசியமான தகவல்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.



