பிள்ளையானுக்கு எதிராக வாக்குமூலம் வழங்க தயாராக இருக்கும் அவரின் நெருங்கிய சகா! தயக்கம் காட்டும் அரசாங்கம்
பிள்ளையானுடன் இருந்து, பல குற்றங்களுக்கு சாட்சியாகவுள்ள அசாத் மௌலானா வாக்குமூலம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்ற போதிலும் ஏன் இந்த அரசாங்கம் இன்னும் அதனைக் கேட்டுப் பெறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதி மறுக்கப்படுவது என்பது நல்லிணக்கத்திற்கு பாதமான ஒரு விடயம். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய காரணியாகவுள்ளது.
1998 - 1999 காலப்பகுதியில் சோமரத்ன ராஜபக்ச என்னும் நபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 15 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
DNA பரிசோதனை
இந்த மனித எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை. DNA பரிசோதனையை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடுவதற்கு தயங்குகின்றது.
அரசாங்கம் செய்த குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். இதனாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம்.
அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கு யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை அமைக்க யோசிக்கவில்லை. அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றினை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை?
ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி, மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய், மாத்தளை, செம்மணி, இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை?
சட்டத்தில் இணையவழி (Online) மூலமாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இயலுமாக இருப்பினும் தற்போது பிள்ளையானுக்கு எதிராக சாட்சி அளிக்க தயாராக உள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலமானது பதிவு செய்யப்படவில்லை.
முக்கிய சாட்சி
அசாத் மௌலானா தனது வாக்குமூலத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கிய போதிலும் அவ்வறிக்கையினை இலங்கை அரசாங்கம் இன்றளவிலும் கேட்டுப் பெறவில்லை.
2004ஆம் ஆண்டிலிருந்து இந் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்தினை உருவாக்கியது இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே. கலில் (ஓட்டமாவடி) மற்றும் பாயிஸ் (காத்தான்குடி) எனும் அழைக்கப்படும் இருவர் தற்போது வரை இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கலில் என்பவர் தமிழரசுக் கட்ச்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயாவின் கொலை வழக்கில் பிள்ளையானுடன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஒருவர். இலங்கை அரசாங்கம் இன்று வரை இவர்களிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.
நியாஸ் எனும் ஒருவர் சாய்ந்தமருதில் சுட்டுக்கொல்லப்பட்டவர். இவர் நிந்தவூர் “Safe House” இல் இருந்ததாக இராணுவ புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்ற போதும் அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் இவர் ஒரு முக்கிய சாட்சியாக கருதப்படக்கூடிய ஒருவர். ஆனால் இச் சாட்சியை மூடி மறைத்துள்ளனர்.
சாரா எனப்படும் புலஸ்தினியினுடைய 3வது DNA அறிக்கையின் பிற்பாடே அவர் இறந்து விட்டார் என மொழியப்பட்டது. இரு தடவைகளும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் பிரகாரம் அவரை ஏன் இனங்காண முடியவில்லை?
இவருடைய தேசிய அடையாள அட்டை அம்பாறை நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சாராவினுடைய அனைத்தும் தீக்கிரையாகி விட்டன என்றால் எவ்வாறு தேசிய அடையாள அட்டை மாத்திரம் கைப்பற்றப்பட்டது? இஸ்லாமிய அடிப்படை வாதத்தை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் தேட நினைக்கும் கட்சிகள் உள்ளன.
பின்னணி சூத்திரதாரி
“மினுவாங்கொட போன்ற இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை எரித்ததற்கு பின்புலத்தில் சரத் வீரசேகர என்பவரே உள்ளார்” என்ற மைத்திரிபால சிறிசேனவின் குரல் பதிவும் உள்ளது. ஆனால் ஏன் இதுவரை காலமும் சரத் வீரசேகரவிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை.
ரொஹான் குணரட்ன என அழைக்கப்படும் விரிவுரையாளர் சிங்கப்பூரில் உள்ள தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகத்தில் Security Defence பற்றிய விரிவுரையாளர். ஐஎஸ் தீவிரவாத அமைப்பே இக் குற்றங்களுக்கு காரணம் என இவர் இரு மாதங்களுக்கு முன்பே கூறியுள்ளார்.
அரசாங்க அமைச்சர் பிள்ளையானே இக் குற்றங்களுக்கு பின்னணி சூத்திரதாரி எனக் கூறுகின்றார். ரொஹான் குணரட்ன என்பவர் பொய்யான வாக்குறுதிகளை மொழிதமைக்காக கனடாவில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
ஆகவே இது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2008ம் ஆண்டு காலப்பகுதியில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த முஹமட் ரசாக் என்பவரது துப்பாக்கி தொலைந்தது. இத் துப்பாக்கி நுவரெலியாவில் உள்ள ரசாக் என்பவரிடம் இருப்பதாக அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் “Islamic Centre” எனும் அமைப்பில் உள்ளார். இத் துப்பாக்கி சபீக் எனப்படுபவரிடமிருந்து ரசாக் என்பவருக்கு விற்கப்பட்டதாகவே தகவல்.
இத் துப்பாக்கியினையே ரில்வான் சாய்ந்தமருதில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது வைத்திருந்தவர் என தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஏன் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
