ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்படாத முக்கிய தகவல்கள் : மீண்டும் சர்ச்சை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் தொடர்பிலான முக்கிய விபரங்கள் இதுவரையில் அம்பலப்படுத்தப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன அண்மையில் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவித்திருந்தார்.
பிரதான சூத்திரதாரி தொடர்பான சர்ச்சை
இது தொடர்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் எக்ஸ் தளத்தில் இட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டு கொண்டதாக ரவி செனவிரட்ன கூறினார் என அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க போன்றவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு இருந்தனர்.
நாடாளுமன்றிலும் இது தொடர்பில் பெரும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான ஓர் பின்னணியில் நிசாம் காரியப்பர் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்த செவ்வியல் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் முக்கிய தகவல்கள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் D35/8/2/24 என்ற வழக்கின் பி அறிக்கையில் மிக முக்கியமான விபரங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதுவரையில் வெளியிடப்படாத பல முக்கிய தகவல்கள் இந்த அறிக்கையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் அல்லது சூத்திரதாரி தொடர்பிலான பல முக்கிய தகவல்களை இந்த அறிக்கையின் ஊடாக பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தம்மால் வெளியிடப்பட்ட ட்விட் பதிவு குறித்து பொலிஸார் மறுப்பு எதனையும் கூறவில்லை எனவும் உயர் பதவிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவரும் அதனை மறுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்டின் மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த தகவல்கள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவோ அல்லது வேறு ஒரு இடத்திலோ கிடைக்கப்பெற்றால் அந்த தகவல்களை பகிர்ந்து கொள்வது தனது பொறுப்பு என கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாகவே இந்த விபரத்தை வெளியிட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார். பிரதான சூத்திரதாரியை ஏற்கனவே அடையாளம் கண்டு கொண்டுள்ளதாக ரவி செனவிரட்ன கூறினார் என்பதை தாம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்படவில்லை எனவும் சம்பவம் தொடுர்பில் வாக்குமூலம் ஒன்றையேனும் பெற்றுக்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலேவிடமும் ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலம் பெறப்படவில்லை என நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மைகளை நாட்டுக்கு அம்பலப்படுத்துவதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு விளைவினையும் எதிா்கொள்ள தயார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
