உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தமிழகத்தில் நால்வர் கைது
கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இரண்டு வழக்குகளில் தமிழகத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய புலனாய்வு பிரிவினால் கடந்த சனிக்கிழமை (10.02.2024) நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், தமிழகத்தின் 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
சோதனை நடவடிக்கை
அரபு வகுப்புக்களின் ஊடாக மாணவர்களை தீவிரவாத தாக்குதல்களுக்கு ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சோதனை நடவடிக்கையானது கோவை குண்டு வெடிப்பு மற்றும் தமிழகத்தில் இஸ்லாமிய அரசுக்கு ஆட்சேர்ப்பு ஆகிய வழக்குகளின் அடிப்படையில் மெட்ராஸ் அரபி கல்லூரி மற்றும் கோவை அரபிக்கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்த இடங்களிலேயே நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது பல நவீன தொழில்நுட்ப கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |