டுவிட்டரிலும் பணம் சம்பாதிக்கலாம்! எலான் மஸ்க் வெளியிட்ட தகவல்
டுவிட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்க், கடந்த அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து எலான் மஸ்க் மேலும் தெரிவிக்கையில், டுவிட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

பயனர்களுக்கு கிடைத்த வாய்ப்பு
அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், முக்கியமானவைகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, டுவிட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள்.

குறிக்கோள்
இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் உங்கள் வேலையை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம்.
படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan