கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் - பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு e-Gates அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன தொழில்நுட்பம் பயணிகளுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதி அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
e-Gates வசதி
ஸ்மார்ட் பயணம் மற்றும் டிஜிட்டல் எல்லை மேலாண்மை நோக்கிய இலங்கையின் பயணத்தில் இதுவொரு முக்கியமான மைல்கல் என குறிப்பிடப்படுகிறது.
அதற்கமைய, இந்த புதிய வசதியை பயன்படுத்த தகுதியுள்ள பயணிகள் முன் பதிவு செய்து வழங்கப்பட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எந்த சிரமமும் இன்றி இல்லாமல் பயணிக்கலாம்.
முதல் படியாக ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். இரண்டாவது படியாக - தேவையான பயோமெட்ரிக்ஸைப் பெற வேண்டும். மூன்றாவது படியாக பயணத்தை e-Gates மூலம் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குடியேற்ற கவுண்டர்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து பயணத்தை மிகவும் இலகுவாக்கும் என குறிப்பிடப்படுகின்றது.



