கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையங்கள் பிரிவில் முறைகேடுகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற வரியற்ற வர்த்தக நடவடிக்கைகளில் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும், அங்கு பெரும் முறைகேடுகள் நடப்பதாகவும் பயணிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சிலர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
வெளிநாட்டுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட தீர்வை வரியற்ற நிறுவனம், இலங்கையின் சுங்க மற்றும் விமான நிலைய சட்டங்களை மீறியதாக ஏற்கனவே பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட சுங்க வரம்புகளை மீறி இங்கு அடிக்கடி வர்த்தக பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் துறைசார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்ட விதிமுறைகள்
இவ்வாறான செயல்கள் பயணிகளின் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு, சட்ட விதிமுறைகள் மற்றும் அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், சுங்க மற்றும் மதுவரி ஏய்ப்புகளின் காரணமாக அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய பெரும் வருமானம் இழக்கப்படும் அபாயமும் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.