துபாய் மக்களுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!
அமீரக குடியிருப்பாளர்கள் வெகுநாள் எதிர்பார்த்து காத்திருந்த, 90 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கும் பிரம்மாண்ட 12 மணிநேர அதிரடி விற்பனை துபாயில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
நூற்றுக்கணக்கான பிராண்டுகள் மற்றும் விற்பனையகங்கள் பங்கேற்கும் இந்த அதிரடி விற்பனை பல மஜித் அல் ஃபுத்தைம் ஷாப்பிங் மால்களில் நாளை(29.06.2023) ஆரம்பமாகவுள்ளது.
இந்த தள்ளுபடியானது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என 12 மணி நேரம் நடைபெறவுள்ளது.
துபாயில் நடக்கவுள்ள இந்த ப்ரோமோஷனானது, துபாய் சம்மர் சர்ப்ரைஸின் (DSS) ஒரு பகுதி ஆகும்.
மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெய்ல் எஸ்டாப்லிஷ்மென்ட் (DFRE) நடத்தும் இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸ் (DSS), சுட்டெரிக்கும் கோடை வெயிலில் குடியிருப்பாளர்களுக்கு சலுகைகள், ஏராளமான கச்சேரி நிகழ்ச்சிகள் மற்றும் பிரம்மிக்க வைக்கும் ராஃபிள்கள் பல ஷாப்பிங் அனுபவங்களை ஜூன் 29 முதல் செப்டெம்பர் 3 வரை வழங்குகின்றது.
குறிப்பாக, மால் ஆஃப் தி எமிரேட்ஸ், சிட்டி சென்டர் மிர்டிஃப், சிட்டி சென்டர் தேரா, சிட்டி சென்டர் மெய்செம் மற்றும் சிட்டி சென்டர் அல் ஷிந்தகா ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் நடைபெறும் விற்பனையை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு அதிக பலன்களைப் பெறலாம் என்று DFRE தெரிவித்துள்ளது.
இதேவேளை DSS ப்ரோமோஷனில் 300 திர்ஹம் மற்றும் அதற்கு மேல் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்கள், 1 மில்லியன் SHARE புள்ளிகளை வெல்லும் வாய்ப்பை பெறுவதற்கான டிராவில் நுழையலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
