களமிறக்கப்படவுள்ள விசேட அதிரடிப்படையினர்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு அருகாமையில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கைது நடவடிக்கை
பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
சிறைச்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பனவற்றில் கடமையாற்றி வரும் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் மீள அழைக்கப்பட உள்ளனர்.
முறைப்பாடு செய்ய வழங்கப்பட்டுள்ள இலக்கம்
விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய போதைப் பொருள் குறித்த முறைப்பாடுகளை செய்ய 0112580518 இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து 24 மணித்தியாலங்ளும் முறைப்பாடு செய்ய முடியும் என விசேட அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam

ஜெயிலில் இருந்து ரிலீஸான கண்ணம்மா: இஷ்டத்துக்கு பணத்தை செலவு செய்யும் பாரதி! வெளியானது முதல் ப்ரோமோ காட்சி Manithan

குழந்தை நட்சத்திரம் நடிகை சாராவா இது? கையில் சிகரெட்டுடன் வெளியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Manithan
