இலங்கை குறித்து ஐ.நாவின் அதிர்ச்சி அறிக்கை
இந்து சமுத்திரத்தின் கிழக்கு பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மோசடி கும்பல்கள் இலங்கையை போதைப்பொருள் பரிமாறப்படும் கேந்திர நிலையமாக பயன்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஆசியாவில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் தயாரிக்கும் நாடுகளுக்கு அண்மையில் அதாவது பூகோளவியல் அமைவிடத்தை பயன்படுத்தி இந்த மத்திய பரிமாற்றும் இடங்களாக மாலைதீவு, இலங்கையை பயன்படுத்துகின்றனர்.
போதை பொருள் உற்பத்தி
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ORGANIZED CRIMINAL NETWORKS LINKED WITH DRUG TRAFFICKING) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி;

ஐக்கிய நாடுகள் அறிக்கை
கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்களின் பிரதான இலக்காக மாலைதீவு மற்றும் இலங்கை மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளும் போதைப்பொருள் பரிமாற்றத்தின் கேந்திர ஸ்தானமாக மாறியுள்ளது.
ஆசியாவில் போதைப்பொருள் தயாரிக்கும் நாடுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளமையும் கடல் வழி போக்குவரத்து மற்றும் பூகோளவியல் அமைப்பும் இதந்கு சாதகமானதாகும். இன்றைய நிலையில் மன்னார் - கல்பிட்டி - காங்கேசன்துறை - யாழ்ப்பாணம் - கிளிநொச்சி கடல் கரைகளில் கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் போன்ற தடைசெய்யப்பட்டவை அதிகமாக கொண்டு வரப்படுகின்றன.

கடத்தல் மார்க்கம்
மேலும் தென்பகுதி கடலில் ஐஸ் - ஹெரோயின் போன்ற போதைப்பொருட்களை கொண்டு வருவதற்கு கடத்தல் காரர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கைக்கு அண்மையில் 'கோல்டன் கிரசன்ட்' என்று அழைக்கப்படும் ஈரான் - ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து செயற்கை போதைப்பொருளான கிரிஸ்டல் மென்ட் என்ற ஐஸ் மற்றும் ஹெரோயின் போன்றன அதிகம் நாட்டுக்கு வருவதாக அறிக்கை கூறுகிறது.

இலங்கைக்கு வரும் வழி
பலுசிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இடையிலுள்ள மக்ரன் கடற்கரையில் இருந்து போதைப்பொருட்கள் விநியோகம் ஆரம்பிக்கப்படுகிறது. அங்கிருந்து ஆபிரிக்காவுக்கும் செல்கிறது.
மேலும் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு அனுப்பப்படும் போதைப்பொருட்கள் பரிமாற்றப்படுவதோடு அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிருந்தே செல்வதாக குறிப்பிடுகிறது.
அராபிய கடல் மற்றும் இந்திய பெருங் கடலில் பயணித்து மாலைதீவு, முருசி தீவை சுற்றி பயணித்து இலங்கை வருவதாக போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகம் குறிப்பிடுகிறது.
இதற்கு கடத்தல் காரர்கள் பொருட்கள் கொண்டு செல்லும் கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam