கிளிநொச்சியில் போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு
கிளிநொச்சியில்(Kilinochchi) போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டத்தினை வலுவூட்டும் வகையில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்றுவித்தல் செயலமர்வு இரு நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் இளையோர்களை உள்ளடக்கிய குறித்த பயிற்சி பட்டறை மாவட்ட செயலக திறன் விருத்தி நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட செயலக கிறிஸ்தவ கலாசார பிரிவின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனமொன்றின் நிதி அனுசரனையில் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம்
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 40 இளையோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர் ஹ.சத்தியஜீவிதா, கருணா நிலைய இயக்குநர் அருட்பணி நேசகுமார் அடிகளார், தனயார் நிறுவன உத்தியோகத்தர் மக்கி, உளவள வைத்தியர் சோமரத்ன வளவாளர்களான காந்தி மற்றும் மாதுஷன், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், உலகம் முழுதும் ஜூன் 26ஆம் நாள் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.