ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் வர்த்தகர்! பொலிஸார் விசாரணை
மொனராகலை அருகே ஆயுதங்களுடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கேயாய பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, 35 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான வழக்குகள்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 குழல் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி ஒன்றும், 5 கிராம் மற்றும் 370 மில்லிகிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
சந்தேகநபர் மீது ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் உள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதுடன், தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.