சோமாலியாவில் கடும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டும் 43,000 பேர் மரணம்!
சோமாலியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிலவிவரும் பஞ்சம் காரணமாகக் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 43,000 பேர் மரணமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனம் மற்றும் லண்டன் 'ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின்' (London School of Hygiene and Tropical Medicine) மூலம் நேற்றைய தினம் (21.03.2023) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சோமாலியா மற்றும் அண்டை நாடுகளான எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகியவை தொடர்ந்து 6 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உலகளாவிய உணவு விலைகளின் உயர்வு மற்றும் உக்ரேன் போர் உள்ளிட்டவற்றால் நெருக்கடியை அதிகரித்துள்ளது.

வறட்சியால் உணவு பற்றாக்குறை
ஆனால் அந்த நாட்டில் மட்டும் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பட்டினி கிடப்பதால் நிலைமை 'மிகவும் மோசமானதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. வறட்சியால் உணவு பற்றாக்குறை, கொலரா போன்ற நோய்களுடன் ஊட்டச்சத்துக் குறைபாடும் ஏற்பட்டு இறப்பு விகிதம் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10,000 பேரில் இரண்டு பேர் ஒவ்வொரு நாளும் இறக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு சோமாலியாவில் உள்ள பே மற்றும் பகூல் மற்றும் தலைநகர் மொகடிஷுவிற்கு இடம்பெயர்ந்த மக்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடு
கிழக்கு ஆபிரிக்காவின் துணை நிறுவனமான அல்-ஷபாப் உடன் சோமாலியா ஆயிரக்கணக்கான போராளிகளுடன் போரிடுவதால், காலநிலை மாற்றம், பாதுகாப்பின்மை ஆகியவற்றால் பல்லாயிரக் கணக்கான கால்நடைகளும் இறந்துள்ளன.
3.8 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. இடம்பெயர்வு நிறுவனம் கூறுகிறது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டில், சோமாலியாவில் கிட்டத்தட்ட அரை மில்லியன் குழந்தைகள் இந்த ஆண்டு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 43,000 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri