கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் ஐந்து டிப்பர்களின் சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலியான அனுமதி பத்திரம்
இதன்போது அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும், போலியான அனுமதி பத்திரத்துடன் பயணித்த டிப்பர் ஒன்றும் தருமபுரம் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேச நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
