சம்மாந்துறை வாகன விபத்தில் சாரதி படுகாயம்
சம்மாந்துறை பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் வாகனமொன்று மோதுண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அம்பாறை பிரதான வீதியில் ஆண்டியசந்தி அருகில் இன்று(3) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அம்பலாங்கொடை பகுதியில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு மாளிகைக்காடு பகுதிக்கு சென்ற நிலையில், சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கம் காரணமாக வீதியை விட்டு விலகி வாகனம் அருகில் உள்ள சுவரில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, 41 வயது மதிக்கத்தக்க சாரதி காயமடைந்து சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனம் உட்பட மின்கம்பம் ஆகியவை சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



