விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்ற சாரதி வாகனத்துடன் கைது
புதுக்குடியிருப்பு - வள்ளிபுனம் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனத்தையும் சாரதியையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத்திற்கு அருகாமையில் துவிச்சக்கர வண்டியில் கடந்த மாதம் 14 ஆம் திகதி 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மீது மோதி கப் ரக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் விபத்தினை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் தப்பிச்சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து பொலிஸாரும், பொலிஸாரும் இணைந்து நடாத்திய 6 நாள் தொடர்ச்சியான தேடலில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியும் வாகனத்தையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலும், விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேவிபுரத்தை சேர்ந்த 27 வயதுடைய வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்திற்குள்ளான இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார்.