தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் என்பது அவர்களின் தனிப்பட்ட விடயம்: டக்ளஸ் விளக்கம்
தமிழரசு கட்சியின் தலைமைத்துவம் என்பது அவர்களின் தனிப்பட்ட விடயம் எனவும் அது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் கூறவிரும்பவில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எமது ஊடகப்பிரிவுக்கு வழங்கிய செய்தியிலேயே இதனை கூறினார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் கடற்றொழிலாளர்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் விரைவில் மக்களை சென்றடையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
வட மாகாணத்தில் கடற்றொழில்துறை அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
மேலும், கடல் தொழில் அபிவிருத்திக்காக வட மாகாணத்திற்கு 500 மில்லியன் நிதியை அமைச்சு ஊடாக ஜனாதிபதி வழங்கியுள்ளார் எனவும், அந்த நிதி கடல் தொழில் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, இந்த ஒதுக்கீடுகளை முறையாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும், அதற்கு பயனாளிகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
