கிளிநொச்சி மக்களின் அவசர கோரிக்கை! உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர்
கிளிநொச்சி பேருந்து தரிப்பிடத்தில் அதிகாலையில் குடித்துவிட்டு அட்டகாசம் செய்த நபருக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
குறித்த நபர் நேற்று அதிகாலை இரண்டு மணியளவில் குடித்துவிட்டு பொதுமக்களை தாக்கியுள்ளார்.
உடனடி நடவடிக்கை
அவரின் அட்டகாசம் எல்லைமீறிச் சென்ற நிலையில் அங்குள்ள வியாபாரிகள் உடனடியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி பேருந்து தரிப்பிடத்தில் அமைதி நிலையை ஏற்படுத்த உதவுமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இரவோடு இரவாக பொலிஸாரை பேருந்து தரிப்பிடத்திற்கு அனுப்பி வைத்து அட்டகாசம் புரிந்த நபரை கைது செய்து வழமை நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில் உடனடி நடவடிக்கை எடுத்து உதவிய அமைச்சரை நேரடியாக வருமாறு அழைத்த வியாபாரிகளின் அழைப்பை ஏற்று காலையில் பேருந்து தரிப்பிடத்திற்கு அமைச்சர் நேரடி விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.