அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ள டக்ளஸ் - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் (Douglas Devananda) தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (04.04.2024) இடம்பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலில் நீரோட்டத்துக்கு பல்வேறு தடைகளைக் கடந்து வந்தவன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி என்பவற்றை எனது அரசியல் காலத்தில் முடிந்தவரை பெற்றுக் கொடுப்பதே எனது இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |