இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் தலைகீழ் மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07.08.2023) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.311.42ல் இருந்து ரூ.312.39 ஆகவும், விற்பனை விலை ரூ.326.74ல் இருந்து ரூ.327.76 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியில் பதிவான நிலைமை
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 309.78 ரூபாவிலிருந்து 312.75 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை பெறுமதி 325 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.313ல் இருந்து ரூ.316 ஆகவும், ரூ.325ல் இருந்து ரூ.328 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam