280 ரூபாய்யை எட்டும் டொலர் பெறுமதி : வர்த்தகர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன்களை மக்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களை பயன்படுத்துமு் நுகர்வோருக்கு அதன் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அமெரிக்க டொலர் பெறுமதி 280 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக திறைச்சேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை குறைக்க வர்த்தகர்கள் தவறினால், பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாட்டை விதிப்பது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் என்பன ரூபாயின் பெறுமதி அதிகரிப்பிற்கு காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் இறக்குமதிக்கான போட்டி வர்த்தகத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு வர்த்தக அமைச்சு இன்று அமைச்சரவை ஒப்புதல் பெற உள்ளது.
இலங்கை மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய,, இந்த வருடம் பெப்ரவரி 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி 4.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சந்தையில் கோதுமை மா, சீனி, வெங்காயம், பருப்பு மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கான வர்த்தகப் போட்டியை அதிகரித்து சந்தையில் விலையை குறைத்து வைத்திருக்கும் திட்டத்திற்கு வர்த்தக அமைச்சு இன்று அமைச்சரவை ஒப்புதலை பெறவுள்ளது.
துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்படும் போது பொருட்களின் விலைகள் மற்றும் உள்நாட்டு சந்தைக்கு பொருட்கள் சென்றடையும் போது இறுதி விலையை நுகர்வோருக்கு அதிகப் பயன் அளிக்கும் வகையில், பொருட்களின் விலைகளை பரவலாக விளம்பரப்படுத்த ஒப்புதல் கோரப்பட்டது.
அமெரிக்க டொலர்
கடந்த சில மாதங்களாக ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் மாற்று வீதம் வீழ்ச்சியடைந்த போதிலும், அதன் விலை உயர்வாகவே காணப்பட்டதாலும், அதன் பலன்கள் நுகர்வோரை சென்றடையவில்லை.
இந்நிலையில் சந்தைப் பகுப்பாய்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சில வியாபாரிகள் விலையை மாற்றத் தவறியதன் மூலம் கூடுதல் இலாபத்தை பெறுகின்றனர்.
இறக்குமதி விலையை குறைப்பதன் பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான அமைப்பை தயாரிக்குமாறு வர்த்தக அமைச்சகத்திற்கு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
