இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி - மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365.74 சதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355.77 சதமாக பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட்
இன்றைய தினம் ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 448.21 ரூபாவாக இலங்கையில் பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதியானது 463.76 ரூபாவாக காணப்படுகிறது.
சுவிஸ் பிராங்க்
இன்றைய தினம் சுவிஸ் பிராங்க் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 370.24 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், அதன் விற்பனை பெறுமதியானது 384.21 ரூபாவாக காணப்படுகிறது.
குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால்
இதேவேளை குவைத் தினாரின் பெறுமதியானது 1180.11 ரூபாவாகவும், கட்டார் ரியாலின் பெறுமதியானது 98.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியாவசிய பொருட்களுக்காக டொலர்களை விடுவிக்க தயாராகும் மத்திய வங்கி! |