அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று சடுதியான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(10) நாணய மாற்று விகிதங்களின் படி, நேற்றையதினம் 291.75 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி இன்றையதினம் 290.64 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
விற்பனை பெறுமதி
இந்த நிலையில், நேற்றையதினம் 300.52 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது இன்றையதினம் 299.92 ரூபாவாக குறைந்துள்ளது.

மேலும், ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355.98 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 369.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.61 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 309.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200.40 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 209.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 178.17 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 187.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam