ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(21.10. 2024) அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 216.94 ரூபாவாகவும், கொள்வனவு விலை 207.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 389.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 375.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
you may like this
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 53 நிமிடங்கள் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan