வேகமாக வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி! வலுவடையும் ரூபா
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(04) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி மீண்டும் 300ரூபாவிற்கு கீழ் குறைவடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
அதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 289.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதே சமயம், அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 298.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
இந்த வார தொடக்கத்தில், 2023 ஜூன் மாதத்துக்கு பின்னர், முதல் முறையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300 ரூபாவுக்கும் கீழ் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam