திடீரென அதிகரித்த இலங்கை ரூபாவின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(07.11.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இது திடீர் அதிகரிப்பாகும்.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.83 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.32 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
