இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் புதிய அறிவிப்பு
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(06.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்து, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (06.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.40 ரூபாவாகவும், கொள்வனவு விலை 323.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 246.51 ரூபாவாகவும், கொள்வனவு விலை 235.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.90 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 346.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 415.41 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 399.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam