ரூபாவின் பெறுமதியில் ஏற்படப்போகும் மாற்றம்! மத்திய வங்கியின் அறிவிப்பு
கடன் மறுசீரமைப்பு செயன்முறை நிறைவடைந்ததன் பின் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நிலையான மட்டத்தில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் சிறந்த முறையில் முன்னோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு செயலாற்றத்தின் அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தமையே இதற்கு காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் பொருளாதாரம்
அதேவேளை இந்த ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் எதிர்மறையான தாக்கத்தை கொண்டிருந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சாதகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜுலை மாதத்தில் பணவீக்கம் 6.3 ஆக காணப்பட்ட போதும், 4 இற்கும் 6 இற்கும் இடைப்பட்ட அளவில் உள்ள பணவீக்கத்தை மாத்திரமே இலங்கையால் தாங்கிக் கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
