ரணில் ஜனாதிபதியாவதற்கு முன்னர் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி
டொலரின் பெறுமதி அதிகரித்து ரூபாவின் பெறுமதி குறைந்தது இந்த ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னராகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதம் ஒன்றின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரபலமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது நாடு வங்குரோத்து நிலையினை அடைந்த பின்னர் அனைத்து நாடுகளும் கடன் வழங்குவதை நிறுத்திவிட்டன. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பில் பல்வேறு மாற்றமான கருத்துக்கள் உள்ளன.
எனினும் பணப் பிரச்சினை இருக்குமானால் நாம் கடன் பெற வேண்டியுள்ளது. அந்தக் கடனை எமக்கு வேண்டிய முறையில் வழங்க மாட்டார்கள். எனவே நாம் சில தியாகங்களைச் செய்யவே வேண்டும்.
டொலரின் பெறுமதி அதிகரித்து ரூபாவின் பெறுமதி குறைந்தது இந்த ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்னராகும். முன்னாள் ஜனாதிபதியால் பொருளாதார முகாமைத்துவத்தைச் செய்து கொள்ள முடியாமற் போனது. எம்மால் இப்போது பிரபலமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.