தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு 100 வீதம் கோவிட் ஏற்படாது என அர்த்தமில்லை
கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு 100 வீதம் கோவிட் தொற்று ஏற்படாது என அர்த்தப்படாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட்19 தடுப்பூசியானது நோய் தொற்றிலிருந்து ஓரளவு பாதுகாப்பு வழங்குமே தவிர 100 வீத உறுதியான பாதுகாப்பினை அளிக்காது என ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மக்கள் முடிந்தளவு கோவிட் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக் கொண்டு சில மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் செயல்திறன் வீழ்ச்சியடைவதாக சில அறிக்கைகளில் கூறப்பட்ட போதிலும் இதனை முழுமையாக அங்கீகரிப்பதற்கு போதியளவு ஆதாரங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பாதிப்புக்களை வரையறுத்துக் கொள்ள தடுப்பூசி உதவுகின்றது எனவும் முடிந்தளவு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
