மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வைத்தியர்கள் விடுக்கும் கோரிக்கை
தற்போது நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அதிககளவு நீரை அருந்தவேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில், சூரியன் நடு உச்சியில் தோற்றம் கொடுப்பதாலும், வறட்சியான காலநிழல ஆரம்பித்துள்ளதாலும் கடுமையான வெப்பமான காலநிலை நிலவிவலுருகின்றது.
இதனால் பொது மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடுமையான வெப்பம் காரணமாக வியர்க்குரு, வெப்பச்சோர்வு, தலையிடி, மயக்கம், மனோநிலை மாற்றம் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாகவும் அவற்றில் இருந்து தம்மை பாதுகாக்க ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒரு லீட்டர் நீர் அருந்த வேண்டும் எனவும் கடும் நிறத்திலான ஆடைகள் அணிவதைத் தவிர்த்து இலகுவான ஆடைகளை அணிய வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.என்.மயூரன் தெரிவித்துள்ளார்.
கடும் வெப்பத்தைத் தணிக்க பச்சைத் தோடை மற்றும் செவ்விளநீர் அத்துடன் பச்சைக் கீரைகளையும் பொது மக்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri