கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம்! - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டிய கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இன்று முதல் மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2021,மே 22 ஆம் திகதி வடக்கு அந்தமான் கடல் மற்றும் மத்திய வங்காள விரிகுடாவை அண்டியுள்ள கடல் பகுதி ஆகியவற்றில் குறைந்த அழுத்த வளிமண்டலம் உருவாக வாய்ப்புள்ளது. மே 23 இல் ஒரு அந்த குறைந்த அழுத்த மண்டலம் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்த நிகழ்வு மே 24 க்குள் ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு வங்க கடற்கரைகளின் ஒடிசா அருகே மே 26 காலை கரையை கடக்கக்கூடும்.
இந்த சூறாவளி உருவாக்கம் காரணமாக, இலங்கையின் மன்னார் முதல் கொழும்பு வழியாக காலி வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது பலத்த மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவில் இலங்கைத்தீவைச் சுற்றியுள்ள ஏனையக் கடல் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காங்கேசன்துறை முதல் சிலாபம் வரை மன்னார் வழியாகவும், காலி முதல் பொத்துவில்
வரை ஹம்பாந்தோட்ட வரையிலுமான கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்கும்.
இதன்போது காற்று அதிகரித்த நிலையில், வீசும் என்று வானிலை மையம்
எதிர்வு கூறியுள்ளது.