இரணைதீவு கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைத்தீவில் 103 கடலட்டைப் பண்ணையாளர்கள் 125 ஏக்கரில் கடலட்டை வளர்ப்பில் ஈடுப்பட்டிருந்ததாகவும், இதில் நான்கு இலட்சம் கடலட்டைகள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக நான்கு இலட்சம் கடலட்டைகளும் இறந்துவிட்டதாகவும், இதன் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நான்கு படகுகள், எட்டு வள்ளங்கள்,10 மீனவகுடிசைகள்,அட்டைப்பண்ணை வலை 200,நண்டு வலை 450,பட்டிவலை 150 கூட்டம் என்பனவும் அழிவடைந்துள்ளனதாக இரணைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan