இலங்கைக்கு உரம் வழங்க மறுக்கும் விநியோகஸ்தர்கள்
உலக சந்தையில் இருந்து உரம் கொள்வனவு செய்வதில் இலங்கையின் விவசாய அமைச்சு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது என விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் இருப்பு பற்றாக்குறையை காரணம் காட்டி சில உர விநியோகஸ்தர்கள் உரத்தை வழங்க மறுத்துள்ளனர்.
அத்துடன் உரம் கொள்வனவு செய்வதில் இலங்கை முன்வைத்த நிபந்தனைகளுக்கு சர்வதேச உர விநியோகஸ்தர்கள் உடன்பட மறுத்துள்ளனர்.
உரங்களின் இருப்பு
எவ்வாறாயினும், 10,000 மெட்ரிக் தொன் உரம் அமைச்சிடம் கையிருப்பு இருக்கின்றது.
பெரும்போக பருவத்திற்கு முன்னர் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கும் விவசாயிகளுக்கு இந்த இருப்பு உரத்தை வழங்குவதற்கு அமைச்சு உத்தேசித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட கடன்களை
பயன்படுத்தி, கட்டளை செய்யப்பட்ட உரங்களின் இருப்பு, எதிர்வரும் நவம்பர்
மாதத்திற்குள் பெற்றுக்கொள்ளப்படும்.”தெரிவித்துள்ளார்.