சஜித் பிரேமதாசவுக்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் கடமையாற்றுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இல்லை என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன் கட்சியின் பதவியில் இருந்து விலகியதை டயானா கமகே மறைத்துவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri