தென்னக்கோனைப் பதவி நீக்க நாடாளுமன்றத்தால் முடியாது! கம்மன்பில தெரிவிப்பு
நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிவிருந்து நீக்குவது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை நீக்குவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தேசபந்து தென்னக்கோன்
ஆனால், அது தவறான தகவலாகும். அவ்வாறு தேசபந்து தென்னக்கோனை தற்போது பொலிஸ்மா அதிபர் பதிவியிலிருந்து நீக்க முடியாது.
தற்போது நாட்டில் நீதிமன்றத் தடையுத்தரவுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ்மா அதிபருடன், பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரும் இருக்கின்றார்.
வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபருக்குரிய பணிகளைச் செய்வதற்கு நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் தற்போதும் தேசபந்துவே பொலிஸ்மா அதிபர் ஆவார். நீதிமன்றத்தின் உத்தரவு நடைமுறையிலிருக்கும் நிலையிலும், நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் அது குறித்து நாடாளுமன்றத்தால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியாது.
நாடாளுமன்ற ஆதிக்கம்
அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நேரடியாக நீதித்துறையில் நாடாளுமன்றம் ஆதிக்கம் செலுத்துவதாகவே அமையும்.
எனவே, நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தேசபந்து தென்னக்கோன் குறித்த எந்தவொரு தீர்மானத்தையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கவோ, நிறைவேற்றவோ முடியாது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பொய் கூறி நாடாளுமன்றத்தை ஏமாற்றியிருக்கின்றார்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
