யானை-மனித மோதலை கட்டுப்படுத்த மாவட்ட மட்ட கலந்துரையாடல்!
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி மாவட்ட மட்டத்தில் யானை–மனித மோதல் தொடர்பிலான குழுக்களை அமைப்பதற்காக திருகோணமலை மாவட்டக் கூட்டம் நேற்று (22) திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டம் திருகோணமலை மாவட்டச் செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
யானை–மனித மோதல்
இந்நிகழ்வில், மாவட்டத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை, யானை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கிராம அதிகாரி பிரிவுகள், 2025 ஆம் ஆண்டில் இதுவரை நிகழ்ந்த யானை–மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள், யானைகள் ஏற்படுத்தும் சேதங்களை குறைப்பதற்கான தீர்வுகள், மேலும் 2026 ஆம் ஆண்டிற்கான செயற்பாட்டு திட்டம் தொடர்பான விரிவான விளக்கத்தை திருகோணமலை மாவட்ட வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் விஜயசிங்க வழங்கினார்.
குறித்த நிகழ்வில், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஒருங்கிணைப்புச் செயலாளர், தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மிமன ஒருங்கிணைப்புச் செயலாளர், கந்தளாய் பிரதேச சபைத் தலைவர், பிரதேச செயலர்கள் ,அனர்த்த முகாமைத்துவ நிலைய மாவட்ட பிரதி பணிப்பாளர் ,பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

காலை வெறும் வயிற்றில் இதில் ஏதாவது ஒன்றை கட்டாயம் எடுத்துக்கோங்க... உடம்பில் அதிசயத்தை உணரலாம் Manithan
