யாழில் காணி மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்
யாழில் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலானது நேற்று(23) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் அழைப்பின்பேரில் வருகை தந்த, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே.நிஹாலின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்களினதும் ஒவ்வொரு பிரச்சினைகளும் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டன.
காணி பிரச்சினை
இதன்போது ஏனைய அரச திணைக்களங்களுடனான காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டன.
பாதுகாப்புத் தரப்பினர் வசமுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணி, வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் வசம் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகள் என்பனவற்றை ஆளுநர் ஊடாக விடுவிக்கக் கோருவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில் வசிப்போருக்கான உறுதிப் பத்திரங்கள் அடுத்த மாதம் வழங்கப்படும் என காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளிலிருந்து மணல் அகழ்வுக்கான அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது எனவும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணியை குத்தகைக்குப் பெற்றுக்கொண்டுள்ள வேறு திணைக்களங்களும் அதனை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்படாது என்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
மேலும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளை புதிதாக வழங்குவது மற்றும் அதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் தலைமையில் முன்னெடுக்குமாறும் ஆணைக்குழுவின் தலைவர் பணித்தார்.
விசேட கவனம்
மன்னார் மாவட்டத்திலேயே அதிகளவான சிக்கல்கள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான 90 ஏக்கர் காணியை தனி ஒரு நபர் மன்னாரில் பயன்படுத்துவதும் இந்தக் கலந்துரையாடலில் வெளிப்படுத்தப்பட்டது.
அது தொடர்பில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு ஊடாக அணுகுவதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள் - காணி, பிரதேச செயலாளர்கள், தென்னை அபிவிருத்திச் சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களும் பங்கேற்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri