நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்!
மூன்றாம் நபர் தலையீடின்றி உற்பத்தியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (14)வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஏற்றுமதி
இதன்போது, உரையாற்றிய ஆளுநர், வடக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. ஆனால் அதை உரிய முறையில் பயன்படுத்தவில்லை.
வடக்கிலிருந்து சிலர் ஏற்றுமதிகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் மூன்றாம் தரப்பு ஊடாகவே ஏற்றுமதிகளை முன்னெடுக்கின்றனர். அவர்கள் நேரடியாக ஏற்றுமதியை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
ஏற்றுமதியுடன் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைந்து இதனைச் செயற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



