இலங்கையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகள் கண்டுபிடிப்பு
ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராபிட்டிய மருத்துவ பீடத்தின் ஆய்வுக் குழுவொன்று, கோவக்கா செடியின் இலைகளைப் பயன்படுத்தி இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளது.
காலி கராபிட்டிய மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முதன்முறையாக இந்த மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மருந்துக்கான காப்புரிமையையும் ஆய்வுக்குழு பெற்றுள்ளது.
பக்க விளைவுகள் இல்லை
பேராசிரியர் டி.பி.வீரரத்ன, கலாநிதி கே.பி.ஜி.வாசனா, பேராசிரியர் கே.ஏ.பி.டபிள்யூ. ஜயதிலக, பேராசிரியர் ஏ.பி. அத்தநாயக்கவின் ஆய்வுக் குழுவினர் இந்தப் புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
158 நீரிழிவு நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த மருந்தின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதும், மருந்தை உட்கொள்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியில் புதிய மருந்து விரைவில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படும் என பேராசிரியர் டி.பி. வீரரத்ன தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சுஜீவ அமரசேனவும் கலந்துகொண்டார்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 33 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
