நாட்டில் மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம்
நாட்டில் மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த குணவர்தன,
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.
மாற்று மருந்துகள்
எவ்வாறாயினும், இரண்டு மயக்க மருந்துகளுக்கும் மாற்று மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த மாற்று மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அண்மைக்காலமாக
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
