சரித் அபேசிங்க மீது ஒழுக்காற்று விசாரணை! சஜித் பிரேமதாச அறிவிப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விளக்கமறியல்
'ஒழுக்காற்று விசாரணைகள் நிச்சயமாக நடத்தப்படும். எடுக்கக்கூடிய மிகப்பெரிய நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும். ஏனெனில், எங்கள் கட்சியில் குற்றவாளிகளுக்கு வாய்ப்போ இடமோ இல்லை' என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள சரித் அபேசிங்க, எதிர்வரும் ஜுலை மாதம் 03ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
