யாழில் தயார்நிலையில் அதிகாரிகள்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
மேலும் தெரிவிக்கையில், "வங்களா விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக காணப்படுகிறது.
யாழ் மாவட்டத்திற்குரிய தீவக கடல் போக்குவரத்துகளும் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ள அதே வேளையில், மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் யாழ் மாவட்டத்திற்கு 9ஆம் திகதிகளில் கூடுதலான மழை வீழ்ச்சி இருக்க கூடும்.
அதாவது, 100 மில்லி மீற்றர் அளவில் கிடைப்பதற்கான அறிகுறி காணப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கீழ் அனைவரையும் உள்ளடக்கி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, அரச அதிபரினால் சகல பிரதேச செயலாளர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், குறிப்பாக சகல கிராம மட்ட அலுவலர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பான அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பகிரப்படும் தகவல்கள் உடனடியாகவே எமது பங்குதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சகல கிராமமட்ட உத்தியோகத்தர்களும் இது சம்பந்தமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைய தேவையில்லை" என வலியுறுத்தியுள்ளார்.
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan