புலிகளின் தாக்குதல் பற்றிய கதை பொய்: பயங்கரவாதிகள் இருந்த தீவுகளில் தலைவர்கள் மறைந்துள்ளனர்
விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடர்பாக தற்போது கதைக்கப்படுவதாகவும் அது பொய்யானது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி வன்முறையானது அலரி மாளிகையில் ஆரம்பமானது.இதனை வேறு கட்சிகள் மீது சுமத்தி விட்டு பிரச்சினையை மூடி மறைக்கக் கூடாது. 9 ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் உள்ளது.
புத்தளம் கழுதை ஒன்று இரும்பு பொல்லுடன் செல்வதை நான் பார்த்தேன். அந்த கழுதையின் பின் முதுகில் ஏறி மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சென்றார்.
இப்படியானவர்களின் பெயர் பட்டியல் வெளியில் வந்துள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் தள்ளாடி செல்வதை நாங்கள் கண்டோம். பிரதிப் பொலிஸ் மா அதிபர் குண்டர்களில் தோளில் கையை போட்டுக்கொண்டு செல்கிறார்.
தண்டனை வழங்க வேண்டுமாயின் அதனை அலரி மாளிகையில் இருந்து ஆரம்பியுங்கள். எமது கட்சியினர் தவறு செய்திருந்தால் தண்டனை வழங்க வேண்டும். அன்றைய வன்முறை மக்களின் ஆத்திரத்தால் ஏற்பட்ட ஒன்று.
ஆளும் கட்சியின் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ தளபதி மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த அதிகாரிகளி தொழில், வரையறை மற்றும் மதிப்பு என்ன என்பது தெரியும்.
வன்முறைச் சம்பவங்களை தடுக்க பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி வரவில்லை என்று அவர்களுக்கு சேறுபூச வேண்டிய அவசியமில்லை.
பொலிஸ் மா அதிபர் வரவில்லை என்று அவருக்கு சேறுபூசும் போது மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களுடன் காணப்பட்டார்.
பிரச்சினை பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி சென்றால், சட்ட ரீதியாக பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதியிடம் தேவையான உதவியை கோர வேண்டும். இராணுவம் சுயமாக சென்று பொலிஸாரின் கடமைகளை செய்யாது.
இராணுவத்தின் மீது குறைக்கக் கூறக் கூடாது. பொலிஸாருக்கு நான் ஒரு ஆலோசனையை வழங்குகிறேன். உங்கள் தொழிலை நீங்கள் கட்சி சார்பின்றி செய்யுங்கள். சுதந்திரமாக செய்யுங்கள்.
தவறு செய்யும் அரசியல்வாதிகளை சட்டத்திற்கு அப்பால் சென்று காப்பாற்றும் வேலையை செய்ய வேண்டாம். சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் காடுகளில் மறைந்துள்ளனர்.
கடந்த காலத்தில் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டிருந்த தீவுகளில் உங்களது(ஆளும் கட்சியினர்) தலைவர்கள் வெளியில் வர முடியாது மறைந்துக்கொண்டுள்ளனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 4 மணி நேரம் முன்

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri

லண்டன் சுரங்க ரயிலில் துபாய் பட்டத்து இளவரசர்! அடையாளம் காணப்படாமல் சுற்றித்திரியும் செல்ஃபீ புகைப்படங்கள்.. News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
