நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் அச்சுவேலி பகுதி விவசாயிகளுக்கு டீசல் வழங்கி வைப்பு (PHOTOS)
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியில் உள்ள விவசாயிகள் டீசலின்றி சிறுபோக செய்கையினை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில், கோப்பாய் பிரதேச செயலகம், வலி கிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், அச்சுவேலி மற்றும் விவசாய சம்மேளனத்தின் சிபாரிசுக்கு அமைய அச்சுவேலி பொலிஸாரின் கண்காணிப்புடன் விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர்கள் பாராட்டு
இவ்வாறு மண்ணெண்ணையையும் முறைப்படி வழங்குவதன் ஊடாக விவசாயச் செய்கையை மேம்படுத்துவதற்கு இலகுவாக அமையும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் செயற்பாட்டினை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்தியக் கடற்படைக்கு 17 போர் கப்பல்கள், 9 நீர்மூழ்கிக் கப்பல்கள்: ரூ.2.4 லட்சம் கோடியில் புதிய திட்டங்கள் News Lankasri
