முதலாம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம்! 120 ரூபாவால் குறைக்க வேண்டுமென வலியுறுத்தல்
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வினால், அரசாங்கம் எரிபொருள் விலையை குறைந்தபட்சம் 120 ரூபாவால் குறைக்க வேண்டும் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தின் போது, நுகர்வோரால் உணரக்கூடிய வகையில் விலைகள் கணிசமான அளவு குறைக்கப்படும் என கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேர குறிப்பிட்டுள்ளார்.
அந்த கணிசமான அளவு 100 ரூபாவிற்கு அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் விலையை 50 ரூபா குறைப்பது சுரண்டல் என்றும் ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan