டியாகோ கார்சியா தீவிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த புதுவாழ்வு

Sri Lankan Peoples United Kingdom England Romania
By Sivaa Mayuri Oct 09, 2024 09:02 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரகசியமான பிரித்தானியா (UK) - அமெரிக்க (US) இராணுவத் தீவான டியாகோ கார்சியா (Diego Garcia) முகாமில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை தற்காலிகமாக ரொமேனியாவுக்கு அனுப்ப பிரித்தானியா அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், ஆறு மாதங்களுக்குப் பின்னர், அவர்கள் பிரித்தானியாவுக்கு மாற்றப்படலாம். அதேநேரம், குழுவில் உள்ள மற்றவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு நிதி சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டில், குறித்த இலங்கை தமிழர்கள், கனடாவை நோக்கிய பயணித்த படகு, விபத்தில் சிக்கிய பின்னர், டியாகோ கார்சியாவில் தஞ்சமடைந்தனர்.

இலங்கைக்கு அமெரிக்காவின் உயர் படையதிகாரி விஜயம்

இலங்கைக்கு அமெரிக்காவின் உயர் படையதிகாரி விஜயம்

படகு விபத்து 

இதன் பின்னர் அவர்கள் தம்மை பிரித்தானியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி வந்த போதும், பின்கதவு இடப்பெயர்வு பாதையை உருவாக்கும் என்ற அச்சத்தில் முந்தைய பிரித்தானிய அரசாங்கம், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்து வந்தது.

டியாகோ கார்சியா தீவிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த புதுவாழ்வு | Diego Garcia Sl Tamils Sending To Romania

அதேநேரம், அந்த தீவில் அவர்கள் பாரிய துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக சிலர் சுயதீங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைகளுக்காக ருவண்டாவுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், டியாகோ கார்சியாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் பகுதியின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு ஒப்படைப்பதாக பிரித்தானியா நேற்று அறிவித்ததை அடுத்தே, இலங்கை ஏதிலிகளுக்கு இந்த புதுவாழ்வு கிடைத்துள்ளது.

நுவரெலியா அஞ்சல் நிலையம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பு

நுவரெலியா அஞ்சல் நிலையம் தொடர்பில் அரசாங்கம் அறிவிப்பு

பல வருடங்கள் 

டியாகோ கார்சியாவில் தற்போது 56 தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் எட்டு பேர் சுய - தீங்கு அல்லது தவறான முடிவெடுத்ததன் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்டு தற்போது ருவாண்டாவில் தங்கியுள்ளனர்.

டியாகோ கார்சியா தீவிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு கிடைத்த புதுவாழ்வு | Diego Garcia Sl Tamils Sending To Romania

இவ்வாறிருக்கையில், தற்போது ருவாண்டாவில் தங்கியுள்ள இலங்கை தமிழர் ஒருவர், ருமேனியாவுக்குச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டமையானது, மிகப் பெரிய நிவாரணம் என்று விபரித்துள்ளார்.

அதேவேளை, மற்றுமொருவர் மூன்று ஆண்டுகளில் இது தமக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பும் விரைவில் பிரித்தானிய நீதிமன்றில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்

இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் திருப்தி வெளியிட்டுள்ள பிட்ச்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US