அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவில்லை! - சுமந்திரன் எம்.பி
அரசாங்கத்துடன் இணைந்து பயணத்தை ஆரம்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பு இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்தும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாக கூறியுள்ளார்.
அத்துடன், உடனடியாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதியினால் உறுதியளிக்கப்பட்ட 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்துடன் இணைந்து பயணத்தை ஆரம்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
