அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையிலான உறவின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடல்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ், இலங்கையின் வெளியுறவு அமைச்சில் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை சந்தித்ததாக அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதன்போது, கொவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்புகளைத் தணிப்பதற்கும் அமெரிக்கா வழங்கும் ஒத்துழைப்புக்கு ஜி எல் பீரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் அமெரிக்காவில் இருந்து தனியார் துறை முதலீடுகளை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை அமெரிக்க - இலங்கை கூட்டாண்மை பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பின் கூட்டு ஆணையகம் உள்ளிட்ட பிற இருதரப்பு விஷயங்களும், இந்த சந்திப்பின் போது விரிவாக விவாதிக்கப்பட்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.