துணுக்காய் கோட்ட பாடசாலை மட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட
பாடசாலைகளுக்கு இடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த 03ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி வரை மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
யோகபுரம் ஆரம்ப பாடசாலை 5 புள்ளிகளையும், மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம் 2.5 புள்ளிகளையும், அனஞ்சயன்குளம் தமிழ்கலைவன் வித்தியாலயம் 37 புள்ளிகளையும், ஜயன்கன்குளம் மகாவித்தியாலயம்103 புள்ளிகளையும், தேறாஞ்கண்டல் அ.த.க.பாடசாலை 84 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
பாடசாலைகளின் நிலைகள்
மேலும், துணுக்காய் அ.த.க பாடசாலை 17 புள்ளிகளையும், தென்னியன்குளம் அ.த.க.பாடசாலை 44 புள்ளிகளையும், யோகபுரம் மகாவித்தியாலயம் 404 புள்ளிகளையும், மல்லாவி மத்தியகல்லூரி 385.5புள்ளிகளையும், கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலம் 42 புள்ளிகளையும், கல்விளான்குளம் மகாவித்தியாலம் 18 புள்ளிகளையும் பெற்றன.
துணுக்காய் கோட்ட பாடசாலைகளில் யோகபுரம் மகாவித்தியாலம் முதன்மை நிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |